சசிகலா குடும்பத்தாரிடம் ஏராளமாக பணம் உள்ளது, அதை வைத்து செயற்கையான மாயை ஏற்படுத்தலாம்: ஜெயக்குமார் கருத்து

அமைச்சர் ஜெயக்குமார்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்

 • Share this:
  சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் தமிழக அரசியலில் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் கூறும்போது, சசிகலா வெளியே வருவதால், தமிழகத்தில், எந்தவித தாக்கமும் ஏற்படாது. அவரும், அவரை சார்ந்தவர்களும் இல்லாத நிலை என்பதே, எங்கள் நிலைப்பாடு. சசிகலாவை சார்ந்தவர்கள் தலையீடு இல்லாமல், கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்பதே, தொண்டர்கள் விருப்பம். அதன் அடிப்படையில் எடுத்த நிலையில், உறுதியாக உள்ளோம்.

  சசிகலா குடும்பத்திடம் ஏராளமாக பணம் உள்ளது. அதை வைத்து, செயற்கையாக மாயை ஏற்படுத்தலாம். அதனால், எந்த பாதிப்பும் இருக்காது. சசிகலா வந்தாலும், யாரும் போக மாட்டார்கள். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்; ஆனால், அந்த நிலைமை வராது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எந்த நோக்கத்திற்காக கட்சியை துவக்கினரோ, அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.

  மத்திய அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதற்கு நிதி பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் நலன் கருதியே, முதல்வர் டெல்லி செல்கிறார், என்றார்.
  Published by:Muthukumar
  First published: