Home /News /tamil-nadu /

’நாட்டிலேயே மருத்துவத்துறையின் முன்னோடி தமிழ்நாடு’: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்..

’நாட்டிலேயே மருத்துவத்துறையின் முன்னோடி தமிழ்நாடு’: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்..

முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளதென்று, முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    சென்னை வடபழனியில் ஃபோர்டிஸ் மருத்துவனை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மருத்துவத்துறை மிகச்சிறந்த உட்கட்டமைப்புகளை கொண்டு இருப்பதாக கூறினார். குழந்தைகள் இறப்பு விகிதம், பேறுகால இறப்பு விகிதம் போன்றவை குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நவீன சிகிச்சைகளிலும், உடல் உறுப்பு தானத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக பாராட்டினார்.

    மேலும் தமிழகத்தில் புதிதாக  உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளின் மூலம் கூடுதலாக 1,650 இடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மருத்துவத்துறையில் 2030-ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது என்றும் கூறினார்.

    மேலும் படிக்க.. முதுமலையில், கழுகுகள் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்தை அமைக்க, தேசிய வனவுயிர் வாரியம் அனுமதி



    அதனைத் தொடர்ந்து பேசியவர், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 ஆண்டுகளில் 56 சிடி ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளை விட, கொரோனாவை குறுகிய காலத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தது நம் நாடுதான் எனக் கூறினார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CM Edappadi Palaniswami, Medical Universities

    அடுத்த செய்தி