தமிழ்நாட்டில் தனியார் மயமாகும் முக்கிய ரயில்வே வழித்தடங்கள்!

சென்னை - மதுரை, சென்னை - கோயம்புத்தூர், சென்னை - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் தனியார் ரயில் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் தனியார் மயமாகும் முக்கிய ரயில்வே வழித்தடங்கள்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 24, 2019, 4:23 PM IST
  • Share this:
தமிழகத்தின் முக்கிய ரயில்வே வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன.

நாடு முழுவதும் ரயில்வே சேவையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ரயில்வேத் துறை தீவிரமாக ஈடுபட்டுகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளிலும் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ரயில் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்தல், ஒரு குறிப்பிட்ட வழிதடத்தை தனியாரிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட அம்சங்களில் தனியார்மயத்தை அரசு திட்டமிட்டுவருகிறது.

ஏற்கெனவே, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ - டெல்லி வழித்தடத்தில் இயங்கும் தேஜாஸ் ரயில் தனியார் மூலம் விரைவில் பயணத்தை தொடங்க உள்ளது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் தனியார் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னை - மதுரை, சென்னை - கோயம்புத்தூர், சென்னை - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் தனியார் ரயில் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன. நேற்று, நடைபெற்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இந்த மாதம் 27-ம் தேதி ரயில்வே அமைச்சகம் சார்பில் டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் ரயில்வே தனியார்மயமாக்கப்படுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து தெரிவித்த எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத் தலைவர் ராஜா ஸ்ரீதர், ‘ரயில்வே தனியார்மயமானல் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ரயில்வே கட்டணம் கடுமையாக உயரும். ரயில்வே தற்போது சேவை அடிப்படையில் செயல்படுகிறது. தனியார்மயமானால் இத்தகைய சூழல் இருக்காது. தனியார்மயத்தால் ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்