ஊரடங்கு காலத்தில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?

தமிழகத்தில் ஊரடங்கு தொடங்கி கடந்த 3 மாத காலத்தில் கடந்த ஆண்டை விட 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை மின்வாரியம் சந்தித்துள்ளது

ஊரடங்கு காலத்தில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?
மின்கட்டணம்
  • Share this:
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு மார்ச் 24 முதல் அமலானபோது வீடுகளில் மின்சார பயன்பாடு 3 மடங்கு வரை உயர்ந்தது. ஆனால் LT எனப்படும் குறைந்த தாழ்வழுத்த பயனீட்டாளர்கள் மொத்த நுகர்வு குறைந்தது. இதுபோல், மின்வாரியத்துக்கு அதிக வருவாயைத் தரும் HT என்னும் உயர் அழுத்த நுகர்வு பெருமளவு குறைந்தது.

அதனால் வாரியத்துக்கு 3 மாதங்களில் கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தை விட 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என்ற தகவல் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.

2019 ஏப்ரலில் உயர் தாழ்வழுத்த நுகர்வோரின் பயன்பாட்டுக் கட்டணம் 1462 கோடியாகவும், குறைந்த தாழ்வழுத்த எல்டி பயனீட்டாளர்களின் பில்தொகை 1892 கோடியாகவும், மொத்தத்தில் 3,354 கோடியாகவும் இருந்தது. ஆனால் 2020 ஏப்ரலில் எச்டி பில்தொகை வெறும் 744 கோடி ரூபாயாகவும், எல்டி பில்தொகை 2019 ஏப்ரலை விட 400 கோடிக்கும் அதிகமாக குறைந்து 1449 கோடியாக சரிந்துள்ளது.


மொத்தத்தில் கடந்த ஏப்ரலை விட இந்த ஏப்ரலில் 1161 கோடி ரூபாய் அளவுக்கு கடுமையாக குறைந்தது. ஊரடங்கு காரணமாக, முந்தைய மாத பில்தொகையே நிர்ணயிக்கப்பட்டது முக்கிய காரணமாக எனக் கருதப்படுகிறது.

இதுபோல் 2019 மே மாதத்தில் எச்டி பில்தொகை 1076 கோடியாக இருந்ததற்கு மாறாக 905 கோடி ரூபாயாக இருந்தது. எல்டி நுகர்வோர் பயன்பாட்டு பில்தொகையும் 300 கோடி ரூபாய் வரை குறைந்தது. எனினும் ஊரடங்கு தளர்வு காரணமாக விடுபட்டுப் போன பில்கள் திருத்தப்பட்டதால் மே மாத பில்தெ்ாகை ஏப்ரலைக் காட்டிலும் 600 கோடி ரூபாய் வரை அதிகரித்து 2619 கோடி ரூபாயானது.

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும் 2019 மே மாதத்துடன் ஒப்பிட்டால் 513 கோடி ரூபாய் பில்தொகை குறைந்துள்ளது.ஊரடங்கு தளர்வுகளின் எதிரொலியாலும் சர்ச்சைக்குள்ளான புதிய கணக்கீட்டின்படி நிலுவை சேர்க்கப்பட்டதாலும் ஜூலையில் வெளியாகியுள்ள ஜூன் மாத பில்தொகை கணிசமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது.

சில பெருந்தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படத் துவங்கியதால் முந்தைய மாதங்களைவிட எச்டி நுகர்வோர் பில் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கான மொத்த பில்தெ்ாகையான 3320 கோடி ரூபாயை விட 359 கோடி ரூபாய் குறைந்து, 2961 கோடி ரூபாய்க்கே பில்தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் கொரோனா காலத்தில் வீடுகளுக்கான பில்தொகை மட்டும் 3 மடங்கு உயர்ந்தும், பெருநிறுவனங்கள் செயல்படாததால், தமிழக மின்வாரியத்துக்கு 2,042 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க...

ஆலமரத்திற்கு 101-வது பிறந்தநாள் விழா கொண்டாடிய மதுரை மக்கள்

அதேநேரத்தில், மின்வாரியத்தின் கட்டண மதிப்பீடு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்திருப்பதாகவும் நுகர்வோர் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading