Tamil Nadu Lockdown: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: எவை இயங்கும்? எவை இயங்காது?

மாதிரிப்படம்

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆலோசனை மேற்கொண்ட போது தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த மே.10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு வரும் 24ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகள் விலக்கு அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

    அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது 10.05.2021 காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 04.00 மணி முடிய அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கு காலத்தில் எவை இயங்கும்: 

    1. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்

    2. பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்

    3. பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்

    4. தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத்
    துறைகள் மட்டும் இயங்கும்

    5. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர்,
    வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    6. மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை
    06.00 வரை இயங்கலாம்.

    7. உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும்,
    நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும்
    அனுமதிக்கப்படுகிறது. (Swiggy, Zomato) போன்ற மின் வணிகம்
    (e-commerce)மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள்
    மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.

    8. பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்.

    9. ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

    10. வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

    11. சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

    12. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும்
    மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

    13. மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

    14. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

    15. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous Process Industries), அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும்
    தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities and Medical equipment) ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படுகிறது.

    16. பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    17. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021)
    மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள்
    வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

    மேல்குறிப்பிட்டுள்ளவை தவிர்த்து மற்றவை எதற்கும் இந்த ஒரு வார முழு ஊரடங்கில் அனுமதி கிடையாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: