ஊரடங்கு தளர்வுகள்: திங்கள் முதல் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி என தகவல்

மாநகரப் பேருந்து

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    தமிழகம் முழுவதும் 21ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

    தமிழகத்தில் கடந்த மே 7-ந் தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36 ஆயிரத்தை கடந்தது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது..இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்ததன் காரணமாக, அந்த 11 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளுடன் 21ம்தேதிவரை 4-வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    21ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 5வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

    கூடுதல் தளங்களுக்கான வாய்ப்புகள்:

    • கடைகள் இயங்க கூடுதல் நேரம் அறிவிக்க வாய்ப்பு

    • திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

    • ஜவுளி மற்றும் நகைக் கடைகள், சிறிய கோவில்கள் மற்றும் பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி வழங்க வாய்ப்பு

    • 50% நகரப்பேருந்துகள் இயக்க வாய்ப்பு

    • பெரிய கடைகளை குளிர்சாதன் வசதி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி..

    • நூலகம், அருங்காட்சியகத்தை திறக்க வாய்ப்பு

    • 11 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வாய்ப்பு

    • அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட்டு அதை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை இன்று மாலைக்குள் முதலமைச்சர் அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Published by:Karthick S
    First published: