7 மணி வரை கடைத்திறப்பு: பேருந்து போக்குவரத்து: வகை 2-ன் 23 மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்?

ஊரடங்கு

வகை 2-ன் கீழ் இடம்பெற்றுள்ள 23 மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தநிலையில், மே மாத இறுதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த வாரத்திலிருந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி,

    வகை 2 -ன் கீழ் 23 மாவட்டங்கள் வருகின்றன.
    அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

    வகை 2-ல் உள்ள மாவட்டங்களுக்கு கீழ்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    • வகை 2-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.

    • பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    • கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
      அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

    • கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

    • மாவட்டத்திற்குள் பொதுப் பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

    • மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Karthick S
    First published: