Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. பொதுப்போக்குவரத்து இயங்காது

தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. பொதுப்போக்குவரத்து இயங்காது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Tamil Nadu Lockdown | தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Sunday Full Lockdown: இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்துவருகிறது. அதனையடுத்து, தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து அமல்படுத்திவருகிறது. அதன்படி, வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    • அந்த நாளில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

    • பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

    • 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

    • உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

    • 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

    • மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

    • எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

    • மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள், மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    • ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Omicron

    அடுத்த செய்தி