தமிழகத்தில் வரும் 7ம் தேதியுடன் தளர்வுகளற்ற ஊரடங்கு நிறைவடையும் நிலையில், நோய் தொற்று குறைந்துள்ள சில மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்வதை தடுக்கும் விதமாக, காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்றே விற்பனை செய்யப்படுகின்றன. முழு ஊரடங்கின் பிரதிபலனாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வரும் 7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைவதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் புதன்கிழமை சுகதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தடுப்பூசி செலுத்தும் பணி, காய்ச்சல் முகாம்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 7ம் தேதிக்கு பிறகு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறிப்பிட்ட நேரம் இயங்க அனுமதி அளிக்கப்படலாம்.
ஆனால், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு வரும் பட்சத்தில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து 12 நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் முந்தைய நாளின் தொற்று பாதிப்பான 26 ஆயிரத்து 513ஐ விட குறைந்து 25 ஆயிரத்து 317 ஆக வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 483 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 200ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 32 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 88 ஆயிரத்து 702 பேர் சிகிச்சையில் இருந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினசரி தொற்று எண்ணிக்கையில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் முன்தினத்தை விட சற்று குறைந்து தொற்று பாதிப்பு 3 ஆயிரத்து 61 ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 2 ஆயிரத்து 217 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
Must Read : வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே! கருணாநிதி பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் உருக்கம்
செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, Lockdown, Night Curfew