தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த அப்டேட்

கே.என்.நேரு

 • Share this:
  தமிழகத்தில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் நீண்ட நாட்களாக அந்த பதவிகள் காலியாக இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டன.

  தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக உருவெடுத்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரை உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது.

  Also Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

  மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  Also Read : மின்வாரிய உத்தரவை மீறும் மின்வாரிய ஊழியர்கள்?.. முறைகேடாக கணக்கீடு செய்யும் மின் கட்டணம்

  இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு, செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்; இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 500 இடங்கள் குளங்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது; தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க உள்ளோம். சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவை 1300 எம்.எல்.டியாக இருக்கிறது. 30 ஆண்டுகள் தேவையை கணக்கில் கொண்டுதான் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: