Tamil Nadu Local Body Election 2021 Result Live Updates | ஒரு ஓட்டு கூடாத வாங்காத அமமுக வேட்பாளர்.. அவருடைய ஓட்டு?

Tamil Nadu Local Body Election 2021 Result Live Updates | தமிழ்நாட்டில் நடந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

  • News18
  • | October 12, 2021, 17:35 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 7 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    17:41 (IST)

    ஆளுக்கு ஒரு குத்து... வடிவேலு பட பாணியில் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு வாக்களித்த நபர்

    17:39 (IST)

    தென்காசி மாவட்டம் 

    ஊராட்சி ஒன்றிய இடங்கள் 144 
    (இதில் 34 வெற்றி நிலவரம்)

    திமுக - 21
    அதிமுக - 3
    காங்கிரஸ் - 3
    மதிமுக - 4
    சுயேட்சை - 3

    17:37 (IST)

    நெல்லை மாவட்டம்   மானூர் ஊராட்சி ஒன்றியம்  7  வது வார்டு கவுன்சிலர் தேர்தலில்  சுயேட்சை வேட்பாளர் ஜெனட் பாபு என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

    17:12 (IST)

    ஒரு ஓட்டு கூடாத வாங்காத அமமுக வேட்பாளர்

    ஈரோடு : பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு  போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சண்முகம் ஒரு ஓட்டுக்கூட வாங்கவில்லை. தன்னுடைய வாக்கு வேறொரு வார்டில் இருந்தால் தன் ஓட்டை கூட தனக்கு செலுத்த முடியாத சூழ்நிலையில் அவர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.

    16:55 (IST)

    விஜய் ரசிகர் மன்றத்தினர் 49 பேர் வெற்றி

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களிலும் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். இதில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் என்று  தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

    16:45 (IST)

    அதிமுக - திமுகவினர் இடையே வாக்குவாதம்

    வேலூர் மாவட்டம்  அணைக்கட்டு ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள் உடைய அறிவிப்பு இதுவரை  வெளியிடாமல்  இருந்த வருவாய் துறை அதிகாரி கனகராஜை முற்றுகையிட்டு அதிமுகவினர் மற்றும் பாமகவினர் வாக்குவாதம். திமுகவிற்க்கு  ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு. போலீசார் முன்னிலையில் வாக்குவாதம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்து திமுகவினருக்கும் அதிமுகவினர்க்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் அனைவரையும் விரட்டி வெளியேற்றினர்.

    16:19 (IST)

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள

    மாவட்ட கவுன்சிலர் - 140
    திமுக - 63
    அதிகமு - 4
    பிற - 2

    ஒன்றிய கவுன்சிலர் - 1381
    திமுக - 149
    அதிமுக - 15
    பிற - 4

    16:4 (IST)

    உணவு வழங்கப்படாததால் வாக்கு  எண்ணும் பணியை நிறுத்திய பணியாளர்கள்

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையத்தில் 85 பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம். அனைவருக்கும் உணவு வந்த பின்னர் தான் வாக்கு எண்ணும் பணி துவங்கும் என அலுவலர்கள் அறிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    16:1 (IST)

    ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

    1. வார்டு-1
    ஸ்ரீ ஜனனி மோகன்ராஜ்
    தி. மு.க


    2.வார்டு-2
    ரூபி துரைபாண்டியன்
    தி.மு.க


    3.வார்டு-3
    சி.எஸ்.செந்தில்குமார்
    தி.மு.க


    4.வார்டு-4
    எழிலரசி.ஆர்
    தி.மு.க


    5.வார்டு-5
    உமாகண்ணுரங்கம்
    தி.மு.க

    15:58 (IST)

    உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கிய பாஜக பிரமுகர்

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதற்கட்ட தேர்தலில் 77. 43 சதவீத வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 78. 47 சதவீத வாக்குகளும் பதிவாகின. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 70.51 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இரு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்கு சீட்டுகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன . இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணங்கள் வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட குழு மற்றும் 74 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களை கைப்பற்றும் என்பதை அறிய திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.