தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் தொடக்கத்தில் நடத்த திட்டம்

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 23-ம் தேதிக்கு முன்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் தொடக்கத்தில் நடத்த திட்டம்
தமிழக அரசு தலைமைச் செயலகம்
  • Share this:
சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் கூட்டத் தொடர் நடத்தப்படவேண்டும். வழக்கமாக பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்  மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும்.

இதனால், 6 மாத கணக்கு டிசம்பரில் முடியும் நிலையில்,  ஜனவரியில்  ஆளுநர் உரை நிகழ்த்துவார். எனவே, கடந்த சில வருடங்களாக குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவதே இல்லை.

இந்த ஆண்டு மானியக்கோரிக்கை மீதான விவாத்திற்கு மார்ச் 9 ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம், ஏப்ரல் 9 ம் தேதி வரை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்து. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டு,  பின்பு  அவசர  அவசரமாக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 24 ம் தேதி முடிக்கப்பட்டது.


Also read... குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு விலையில்லா முகக்கவசங்கள் - திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர்

எனவே  6 மாதத்திற்குள் சட்டப்பேரவை  கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பதால், குளிர்கால கூட்டத் தொடர் செப் 24ம் தேதிக்குள் கட்டாயம் நடத்தப்படவேண்டும். இதன் அடிப்படையில் செப் 23-ம் தேதிக்குள் சட்டப்பேரவை குளிர்கால கூட்டம் நடைபெறவுள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading