ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விவசாயிகளை வஞ்சித்து நிலத்தை எடுத்துக் கொள்ள அரசு கருதாது - தங்கம் தென்னரசு

விவசாயிகளை வஞ்சித்து நிலத்தை எடுத்துக் கொள்ள அரசு கருதாது - தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று சொல்லுகின்றீர்கள். மற்றொருபுரம் அதிக இழப்பீடு தாருங்கள் என்று கூறுகிறீர்கள். நாங்கள் என்னதான் செய்வது - தங்கம் தென்னரசு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எந்த இடத்திலும் விவசாயிகளை வஞ்சித்து ஒரு நிலத்தை எடுத்துக் கொள்ள அரசு கருதாது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்திற்கு பின்னர் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, "சிப்காட் மற்றும் அரசுக்கு நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகளுக்கு ஒரு மாதிரியாகவும், தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மாதிரியாகவும் கையகப்படுத்துவதற்கு வெவ்வேறாக இழப்பீடு தொகை வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.  

அதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்சாலைகளுக்கு சிப்காட்டுக்கும் நிலம் எடுக்கும் பணி உங்கள் ஆட்சியிலும் நடந்தது. சிப்காட் ரியல் எஸ்டேட் நிறுவனம் கிடையாது, தொழிற்பேட்டைக்கான நிலத்தை கையகப்படுத்தும் போது, விவசாயிகளிடமிருந்து பெறும் நிலங்களில் இருக்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட பணிகளை முழுவதும் நாங்கள் செய்கின்றோம். மின்சாரம் தண்ணீர் என அனைத்தும் கொடுக்கிறோம். அதே நிறுவனங்களிடம் மேம்படுத்தப்பட்ட நிலத்தின் விலையில் தான் கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் இடத்தில் குறைவாகவும், நிறுவனங்களிடம் அதிக விலைக்கும் பெறுகிறோம் என்று குற்றச்சாட்டு தவறானதென தெரிவித்தார்.

மேலும், விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று சொல்லுகின்றீர்கள். மற்றொருபுரம் அதிக இழப்பீடு தாருங்கள் என்று கூறுகிறீர்கள். நாங்கள் என்னதான் செய்வது. விவசாயிகள் விரும்புகிற பொழுது அரசு வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எந்த இடத்திலும் விவசாயிகளை வஞ்சித்து ஒரு நிலத்தை எடுத்துக் கொள்ள அரசு கருதாது, என பதிலளித்தார்.

First published:

Tags: Tamil News, Thangam Thennarasu, TN Assembly