Home /News /tamil-nadu /

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji | மின் கட்டணம் தமிழ்நாடு மட்டுமில்லாமல், கர்நாடக உள்ளிட்ட 14 மாநிலங்களில் உயர்ந்தபட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவிலே மிக மிக குறைவாக மின் விலை நிர்ணயக்கபட்டு, வசூலிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்திர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை வடக்கு பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் செயல்படும் மின்சாரம் மற்றும் பகிர்மான கழகங்களில் பணிபுரியும் அலுவலகர்களுடன் சிறப்பு ஆய்வு கூட்டம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்திர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில் வடக்கு பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி சேகர், கே.பி.பி.சங்கர், எபிநேசர், துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்துவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது. வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளில் 60 சதவீத பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளது.

புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும். 60 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின் கணக்கீட்டில் புதிய கட்டணம் அமுலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணமும், அதற்கு முன்பான நாட்களுக்கு பழைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் உற்பத்திக்கும் மின் விநியோகம் இடையே அதிக வேறுபாடு உள்ளது.

ALSO READ | அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு : ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி உயர் நீதிமன்றத்தில் தகவல்

அந்த வேறுபாடுகளை குறைக்கும் வகையில் புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக சிறுகுறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன் பேரில் உத்தேசிக்கப்பட்ட தொகையை விட குறைவான அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் தமிழ்நாடு மட்டுமில்லாமல், கர்நாடக உள்ளிட்ட 14 மாநிலங்களில் உயர்ந்தபட்டுள்ளது, இந்தியாவிலே மிக மிக குறைவாக மின் விலை நிர்ணயக்கபட்டு, வசூலிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான்.

கடந்த சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட 316 புதிய துணை மின் நிலையங்களுக்கு, 242 மின் நிலையங்கள அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் காலத்தில் 62 சதவீதமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் 24 சதவீத மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

நேற்று முன்னாள் அமைச்சர்கள் சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உங்கள் தூண்டுதல் தான் காரணம் என்ற கேள்விக்கு? என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது, நான் அதை நீதிமன்றம் வாயிலாக சந்தித்தேன், அதுபோல குற்றச்சாட்டு வரும் பொழுது நீதிமன்றம் சென்று தான் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் சமர்ப்பித்த சொத்து மதிப்பு அளவின், தற்போதைய சொத்து மதிப்பு அளவின் வித்தியாசமும், அவர்களின் குடும்பத்தினர் சொத்து மதிப்பு அளவின் வித்தியாசத்தை பார்த்தாலே தெரிந்து விடும் என தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Chennai power cut, Power cut, Senthil Balaji

அடுத்த செய்தி