இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருவதாக, முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்
முதல்வர்
  • Share this:
சவிதா மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதால், தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

பேறுகால தாய்மார் இறப்பு விகிதத்தில், 2030-ல் அடைய வேண்டிய இலக்குகளை, இப்போதே அடைந்து, தமிழ்நாடு சரித்திர சாதனையை எட்டி இருப்பதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் படிக்க...கடிதம் மட்டுமல்ல., காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் ஒவ்வொரு நிமிட உரையாடலையும் லீக் செய்கிறார்கள் - ரம்யா


மேலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உடல் உறுப்பு தானத்தில் முன்னிலையில் இருப்பதாக கூறிய முதலமைச்சர், தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருவதாக குறிப்பிட்டார்.
First published: August 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading