ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தென்னிந்தியாவில் இந்தி படிப்பவர்களில் தமிழகம் முதலிடம்!

தென்னிந்தியாவில் இந்தி படிப்பவர்களில் தமிழகம் முதலிடம்!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ் நாட்டில் இந்தி பயில வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் இந்தி பயில்வோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்து வருவதாக கள நிலவரங்கள் கூறுகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென்னிந்திய மாநிலங்களில் இந்தி கற்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளதாக இந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம் வரை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

  நடப்பாண்டு மட்டும் 1,31,592 பேர் தமிழ் நாட்டில் இந்தி கற்கின்றனர். இதில் 34589 பேர் சென்னையை சேர்ந்தவர்களாகும் . 2021-ல் தென்இந்திய மாநிலங்களில் இந்தி கற்போர் எண்ணிக்கை 3.17 லட்சமாக இருந்த நிலையில் 2022-ம் ஆண்டு இது 3.28 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் அதிகமாக இருந்தாலும், அதை சரளமாக பேசும் திறன் குறைவாகவே உள்ளதாக இந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது.

  இந்தி இளநிலை, முதுநிலை டிப்ளமோ படிப்புகளை படிக்க தமிழ் நாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகம் போன்ற தென்னிந்திய மாநிலங்களை காட்டிலும் தமிழ் நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் இந்தி கற்று வருவதாக இந்தி பிரசார சபையின் பொதுச்செயலாளர் செல்வராஜன் கூறுகிறார்.

  Also Read : திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி? - பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

  கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் சில பள்ளிகளில் மட்டுமே இந்த நடைமுறை இருப்பதால் இந்தி பிரசார சபா மூலமாக இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

  ' isDesktop="true" id="815038" youtubeid="8Sp4wMWFCcM" category="tamil-nadu">

  இந்த விவகாரம் தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்ன்டைன் ரவீந்திரன் நியூஸ்18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இந்தியை தேவைப்படுபவர்கள் படிக்கின்றனர். தேவையில்லை என்பவர்கள் படிப்பது இல்லை. இந்தி படிப்பவர்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தேவைப்படுபவர்கள் படிக்கலாம். எந்த மொழிக்கும் திமுக எதிர்ப்பு இல்லை. எங்கள் முழக்கம் இந்தி திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம். மும்மொழி கொள்கையை மத்திய அரசு கட்டாயமாக்குகிறது. கல்வி மாநில அரசின் உரிமையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் விடாபிடியாக உள்ளோம் என்று தெரிவித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Hindi