"தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடே தயாராக உள்ளது; ஆனால் தடுப்பூசி தான் இல்லை" - மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிக தடுப்பூசி செலுத்திக்கொண்ட தொகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி உள்ளது. இதற்கு காரணம், அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கையைப் பிடித்து இழுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் தான். 

  • Share this:
தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடே தயாராக உள்ளது. ஆனால் தடுப்பூசி தான் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில், தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்க விழா நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசுகையில், "இங்கு ( பார் கவுன்சில் வளாகம் ) கூடியிருக்கும் கூட்டம் தனி மனித இடைவெளிக்கு எதிரானது. இவ்வளவு கூட்டம் சேரக்கூடாது. தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவாது. கொரோனா 2ம் அலையைக் கட்டுப்படுத்த சமீப காலமாக சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வை உண்டாக்கி நோய்த்தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும்," என்றார்.

Also Read:   உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்," இன்னும் 10 நாட்களுக்குள்ளாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும். பழங்குடியினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியும் 10 நாட்களுக்குள் முடிவடையும்.

234 சட்டமன்ற தொகுதிகளில், அதிக தடுப்பூசி செலுத்திக்கொண்ட தொகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி உள்ளது. இதற்கு காரணம், அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கையைப் பிடித்து இழுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் தான். தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடே தயாராக உள்ளது.  ஆனால் தடுப்பூசி தான் இல்லை.

Also Read:   அமைச்சர்களின் கார் பார்க்கிங்கான ஸ்போர்ட்ஸ் ட்ராக்.. விஐபி கலாச்சாரத்தை தோலுரித்து காட்டிய பாஜக எம்.எல்.ஏ!

இதுவரை 1.44 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 1.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் 2 லட்சம் தடுப்பூசிகள் தான் உள்ளன. இதில் பாதி தற்போது காலியாகி இருக்கும். மதியம் 12 மணி அளவில் தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டுவிடும், " என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், "நான் தலைமை நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள் வைக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் அவர் சென்றுவிட்டார். அதனால் இங்குள்ள பிற நீதிபதிகளிடம் கோரிக்கையை முன்வைக்கிறேன். 11 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது.

ஆனால் ஒன்றிய அரசு 1.46 கோடி தடுப்பூசிகளை மட்டுமே வழங்கி உள்ளது. அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசை சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு விரைந்து தடுப்பூசி கிடைக்க, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உதவி செய்ய வேண்டும்,'" என்றார்.
Published by:Arun
First published: