ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாங்குரோவ் காடுகளை இழக்கும் தமிழ்நாடு... மத்திய அரசு ஆய்வு

மாங்குரோவ் காடுகளை இழக்கும் தமிழ்நாடு... மத்திய அரசு ஆய்வு

மாங்குரோவ் காடு

மாங்குரோவ் காடு

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மாங்குரோவ் காடுகளை இழக்கும் நிலையில் தமிழ்நாடு உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலுள்ள காடுகளின் நிலைகுறித்து மத்திய அரசின் வனத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அக்டோபர் 2017-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் வனப்பரப்பு 5,188 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாக  கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வனப்பரப்பு 26,364 சதுர கிலோமீட்டராக கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பைவிட 83 சதுர கிலோமீட்டர் மட்டுமே அதிகம்.

இந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயங்களில் ஒன்றாக தமிழ்நாட்டில் உள்ள மாங்குரோவ் காடுகளின் ஒட்டு மொத்த பரப்பளவு நான்கு சதுர கிலோ மீட்டர் வரை குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாங்குரோவ் காடுகள் உள்ளன.

2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த எட்டு மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 49 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு மாங்குரோவ் காடுகள் இருந்தன. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த கணக்கெடுப்பில் இந்த எட்டு மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 44  சதுர கிலோ மீட்டருக்கு மட்டுமே மாங்குரோவ் காடுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் 1.07 சதுர கிலோமீட்டர், திருவாரூரில் 3.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் அழிந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  சுனாமி போன்ற பெரிய அலைகளையும், வேகமாக வீசும் காற்றையும் தடுக்கும் ஆற்றல் படைத்தவை மாங்குரோவ் காடுகள்.

இரண்டே ஆண்டுகளில் 4 சதுரகிலோமீட்டர் பரப்பளவு மாங்குரோவ் காடுகள் குறைந்திருப்பது கவலைக்குரிய விஷயமாகும். இந்த கணக்கெடுப்பானது 2018-ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் வரைக்குமே மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், 2018-ம் ஆண்டு  நவம்பர் மாதம்தான் தமிழகத்தை கஜா புயல் தாக்கியது. அதனால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மாங்குரோவ் காடுகள் மோசமாக பாதிப்படைந்தன. இந்த பாதிப்பையும் கணக்கிலெடுக்கும் பட்சத்தில் மாங்குரோவ் காடுகளின் பரப்பு மேலும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Forest Department