ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகம் வெற்றி நடை போடவில்லை வேதனையில் தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறது - சி.ஆர்.சரஸ்வதி

தமிழகம் வெற்றி நடை போடவில்லை வேதனையில் தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறது - சி.ஆர்.சரஸ்வதி

சி.ஆர்.சரஸ்வதி

சி.ஆர்.சரஸ்வதி

ஆர்.கே நகரில் கேட்ட குக்கர் விசில் சத்தம் அதை விட கோவில்பட்டியில் சத்தமாக கேட்கும் என்ற நம்பிக்கை உண்டு என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டிடிவி தினரகனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான சி.ஆர்.சரஸ்வதி கோவில்பட்டி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஆங்கிலேயர்களை வெளியேற்ற நமது முன்னோர்கள் போராடினர் தற்போது மக்கள் பணத்தினை கொள்ளை அடிப்பவர்களை வெளியேற்ற போராடிக் கொண்டிருக்கிறோம்.

  சுதந்திரப் போராட்டத்தில் எப்படி வெற்றி கிடைத்ததோ அதை போன்று  கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் வரிபணத்தினை  கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் இபிஎஸ் - ஓபிஎஸ் வெளியேற்ற மக்கள் பலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு என்றும், ஆர்.கே நகரில் கேட்ட குக்கர் விசில் சத்தம் அதை விட கோவில்பட்டியில் சத்தமாக கேட்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றும், எல்லா வீட்டிலும் இன்று காலையில் குக்கரில் தான் சமையல், எல்லோர் வீட்டிலும் குக்கர் எப்படி இருக்கிறதோ அதைப்போல  கோவில்பட்டியில் எல்லோருடைய ஓட்டும் குக்கருக்கு இருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு என்றும். துரோகிகளிடம்  அதிமுக மற்றும் இரட்டை இலையும் கொடுத்து விட்டோம் என்றும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கஷ்டப்பட்டு அதிமுக ஆட்சியை நிலை நிறுத்தியவர் சசிகலா .அதனால் தான் இபிஎஸ் முதல்வர், ஓபிஎஸ் துணை முதல்வர், எல்லோருக்கும் மாண்புமிகு அமைச்சர் என்று கிடைத்தது.

  ஆனால் அவர்கள் நன்றி மறந்து விட்டனர். ஜெயலலிதா கை காட்டினர்  இவர்கள்  வெற்றி பெற்றனர். அதன் பின்னர் சசிகலா , டிடிவிதினகரன் கை காட்டியதால் இந்த ஆட்சி இருக்கிறது.ஜெயிக்கிற வரைக்கும் கூட இருந்து விட்டு, பாஜகவுடன் கை கோர்த்து அவர்கள் தயவில் ஆட்சி நடத்தி வருகின்றனர்.வெற்றி நடைபோடும் தமிழகமே என்று மனசு கூசாமல் பேசுகின்றனர்.

  தமிழகம் வெற்றி நடை போட வில்லை வேதனையில் தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் ரூ2500 கொடுத்து விட்டு, உங்ககிட்ட ஓட்டு வாங்கி மறுபடியும் பல லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என்று நினைக்கின்றனர்.அது இனிமேல் நடக்கக்கூடாது என்றும், ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சர்கள் இதுபோன்று பேச முடியுமா?

  ஸ்டெர்லைட் வேண்டாம் என்று போராடியவர்களை தீவிரவாதிகள் போன்று இந்த அரசு சுட்டுக் கொலை செய்தது. இதுபற்றி முதல்வரிடம் கேட்டால் தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார். காவல்துறை முதல்வர் பொறுப்பில் தான் இருக்கிறது. மக்களைச் சுட போவது முதல்வருக்கு தெரியாதா? அப்பாவி மக்களை சுட்டுக் கொள்வது தான் வெற்றி நடைபோடும் தமிழகமா? மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது.எத்தனை சூட்கேஸ்கள் அமைச்சர்கள் வாங்கி இருக்கிறார்கள் என்று மக்கள் தெளிவாக சொல்லும்போது குக்கர் விசில் அடிக்கமால் வேற எந்த சின்னமும் ஜெயிக்காது குக்கர் தான் ஜெயிக்கும்.ஜெயலலிதாவுடன் 34 ஆண்டுகள் வாழ்ந்த சசிகலாவை, ஜெயலலிதா நினைவிடத்திற்கு கூட செல்ல விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தார்.

  கோவில்பட்டி செய்தியாளர் மகேஸ்வரன்

  Published by:Arun
  First published:

  Tags: Kovilpatti Constituency, TN Assembly Election 2021