• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பன்றிக்காய்ச்சலால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

பன்றிக்காய்ச்சலால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

பன்றிக்காய்ச்சலால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை மருத்துவ மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

  • Share this:
    சென்னையில் கடந்த 11ஆம் தேதி பெய்த பலத்த மழையின் போது சென்னை எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 68 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. மிகவும் கடினமான காலக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெற்றதை பாராட்டி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சென்னை எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

    இந் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளில் 63 சதவீத அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவங்கள் நடப்பதாக தெரிவித்தார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அரசு மருத்துவமனைகளில் 65 சதவீத சுகப்பிரசவங்கள் நடப்பதாக தெரிவித்த அவர் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு அறுவை சிகிச்சைகள் மூலம் பிரசவங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் தொடர்ந்து ஆளுநர் இடத்தில் உள்ளது. சட்ட வல்லுனர்களுடன் ஆளுநர் கலந்து ஆலோசனை செய்து வருவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழக அரசு கண்காணித்து வருகிறது.

    கோவையில் இரண்டு நபர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரக்கூடியவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளபடுகறிது. பன்றி காய்ச்சலால் தற்போதைக்கு தமிழகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: