ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் அமைதி மாநிலமாக திகழ்கிறது- உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் ரகுபதி பெருமிதம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் அமைதி மாநிலமாக திகழ்கிறது- உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் ரகுபதி பெருமிதம்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் விகிதத்தை பொறுத்தவரை தமிழகம் தேசிய சராசரியான 78.7 சதவீதத்தை விட 15 சதவீதம் அதிகமாகப் பெற்று 93.5 சதவீதமாக உள்ளது - அமைச்சர் ரகுபதி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Haryana | Tamil Nadu

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் இந்தியாவிலேயே அமைதி மாநிலமாக திகழ்வதாக உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

  ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. மாநிலங்களின் முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் இந்த முகாமில் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசினார்.

  தனது உரையில் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் இந்தியாவிலேயே அமைதி மாநிலமாக திகழ்கிறது. மாநிலத்தில் அமைதியான சூழலைப் பேணிக்காத்து வருவதுடன், மாநிலத்திலுள்ள மக்கள் பாதுகாப்பு உனர்வுடன் வாழும் சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கி, சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகிறது.

  காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பங்களித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.593.83 கோடியும் மாநில அரசு ரூ.356.70 கோடியும் ஒதுக்கின. அந்தவகையில் ஒதுக்கப்பட்ட ரூ.950.53 கோடியில் தமிழக அரசு இதுவரை ரூ.716.98 கோடியை செலவழித்துள்ளது.

  குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் விகிதத்தை பொறுத்தவரை தமிழகம் தேசிய சராசரியான 78.7 சதவீதத்தை விட 15 சதவீதம் அதிகமாகப் பெற்று 93.5 சதவீதமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

  இதையும் படிங்க: இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை விரைந்து மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

  மேலும், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படை நம் மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் செல்ல நிர்ப்பந்தித்து அவர்களை கைது செய்கின்றனர். இத்தகைய கைது சம்பவங்களை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: CM MK Stalin, Home Minister Amit shah