• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாணவர்களுக்கு குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி வழங்குவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- ஸ்டாலின் பெருமிதம்

மாணவர்களுக்கு குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி வழங்குவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது- ஸ்டாலின் பெருமிதம்

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

அனைத்து தரப்பினரும் எழுத பயிற்சி அளிப்பதற்காக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அண்ணா மேலாண்மை நிலையம் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

  • Share this:
    மாணவர்களுக்கு குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி வழங்குவதில் பிற மாநிலங்களுக்கு எல்லாம், தமிழ்நாடு முன்மாதிரியாக செயல்படுவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 35 பேருக்கு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், வசதி படைத்தவர்கள் மட்டுமே எழுதக் கூடியதாக இருந்த குடிமைப் பணித்தேர்வை, அனைத்து தரப்பினரும் எழுத பயிற்சி அளிப்பதற்காக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அண்ணா மேலாண்மை நிலையம் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

    அனைத்து வசதிகளும் கொண்ட இந்த மையம் தொடர்பாக, தெலங்கானா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் விசாரிப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகம் சமூக நீதியின் மாநிலமாக திகழ்வதாகவும், கடுமையான போட்டிகள் நிறைந்ததாக குடிமைப்பணி தேர்வு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    Also Read : ஊரக உள்ளாட்சித் தேர்தல் : வாக்குச்சாவடிகளில் முடிந்த அளவுக்கு கண்காணிப்பு கேமரா - தமிழக அரசு

    நமது வெற்றி நமக்கானது அல்ல, சமூகத்துக்கானது என சிந்தியுங்கள் என அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய அளவில் உயர் பதவியில் இருக்கும் போதும், வளர்ந்த மண்ணையும், தமிழ் மொழியையும் மறந்துவிட கூடாது என வலியுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: