சிறுமியை கற்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
புதுச்சேரி மூலக்குளத்தில் சித்தி வீட்டில் தங்கிய ஊட்டியை சேர்ந்த இமான்ராஜ் சித்தியின்
17 வயது மகளை 2018 ம் ஆண்டு கற்ப்பமாக்கிய வழக்கில் கைதானார். போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் சிறப்பு நீதிபதி செல்வநாதன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு - கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியத்தை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடு
முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் ஏற்கெனவே 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்கலாம் என உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு தலைவராக குல்சன் ராஜ் மற்றும் தமிழக கேரள அரசின் நீர்வளத்துறை செயலாளர் உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுனரும், தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் இருந்து தலா 1 தொழில்நுட்ப வல்லுனரும் கூடுதலாக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில் காவிரி தொழில்நுட்ப குழுத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தமிழக அரசின் தொழில்நுட்ப வல்லுனராக தமிழக அரசு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி..
மதுரை உசிலம்பட்டி சாலையில் உள்ள வாலாந்தூர் அருகே ஆரியபட்டி கிராமத்தைச் சேர்ந்த வல்லநாடு என்பவரது மனைவி லட்சுமி (வயது 50) இவர் இன்று தனது தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றை சுத்தம் செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கியபோது தவறி விழுந்ததில் காயம்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி இறந்த லட்சுமியின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வாலாந்தூர் போலீசார் விசாரணை.