சேலத்தில் 40 டிகிரியை நெருங்கிய வெப்பநிலை - மற்ற மாவட்டங்களில் எவ்வளவு?

சேலத்தில் 40 டிகிரியை நெருங்கிய வெப்பநிலை - மற்ற மாவட்டங்களில் எவ்வளவு?

மாதிரிப் படம்

தமிழகத்தில் சேலத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று சேலத்தில் அதிகபட்சமாக 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வடகிழக்கு பருவமழை பருவத்தில் மழையின் அளவு கடந்த காலங்களை விட நன்றாக இருந்தது. வழக்கமாக பிப்ரவரி முதலே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி கடைசி வரை காலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்தது.

    இந்தநிலையில், மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து வெயிலின் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சேலத்தைத் தொடர்ந்து, கரூர் பரமத்தி பகுதியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், வேலூர், திருச்சியில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. மதுரையில் 37.4 டிகிரி செல்சியஸும், தருமபுரியில் 37.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதேபோல குறைந்த பட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கொடைக்கானலைத் தொடர்ந்து உதகமண்டலத்தில் 11.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குன்னூரில் 14.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பதால் வரும் நாட்களில் பல மாவட்டங்களில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: