முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “மதியம் 12 - 3 மணி வரை வெளிய போகாதீங்க”... கொளுத்தும் வெயிலை சமாளிக்க அரசு அறிவுறுத்தல்..!

“மதியம் 12 - 3 மணி வரை வெளிய போகாதீங்க”... கொளுத்தும் வெயிலை சமாளிக்க அரசு அறிவுறுத்தல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை தமிழ்நாடு உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை வெயிலை எதிர்கொள்வதற்கு மாவட்ட அளவில் ”வெயில் செயல் திட்டத்தை” உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக்ஸ், குளிரூட்டும் கருவிகள், போதிய குடிநீர் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடிக்கடி போதிய அளவு குடிநீர் பருக வேண்டும், தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read :காஃபி குடிக்க சரியான நேரம் எது தெரியுமா?

மெல்லிய தளர்வான உடை மற்றும் பருத்தி ஆடைகளை மட்டும் அணிய வேண்டும், வெளியில் செல்லும் போது குடை, தொப்பி, துண்டு போன்றவற்றால் தலையை மூடியபடி செல்ல வேண்டும், குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக வெப்ப நிலை இருக்கும் நேரத்தில் சமைக்கக் கூடாது. மதுபானம், தேநீர், காபி, சர்க்கரை அதிகமாக இருக்கும் குளிர்பானங்களை குடிக்கக் கூடாது, அதிக புரதசத்து உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால், அனைத்து மாநில அரசுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கேட்டுக் கொண்டுள்ளார். மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அமைப்புகள் வழங்கும் என்றும் ராஜீவ் கவுபா தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Summer, Tamilnadu