திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சி பெறும் காவலர்களுக்கான நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் தலைமையேற்று பயிற்சி நிறைவு பெற்ற காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து போர்த்திறன் பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் பின்னர் சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் பேசுகையில், சிறைவாசிகளை மனித நேயத்துடன் அணுகி அவர்கள் மனம் திருந்தி சமூகத்தில் நன்கு வாழ, சீர்திருத்தி மறுவாழ்வு அளிக்கும் வகையில் சிறைக் காவலர்கள் பணியாற்ற வேண்டும்.
சிறைகள் தண்டனைக்கான இடமாக இல்லாமல், சீர்திருத்தி தொழில், வேலை வாய்ப்பு பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, அவை சார்ந்த குற்றங்கள் பெருகும் சவாலாக இருக்கும். பயிற்சி நிறைவு பெற்றுள்ள சிறைக்காவலர்கள் இவற்றையும் எதிர்கொண்டு, மனப் பக்குவத்துடன் பணியாற்ற வேண்டும். இந்தியாவிலேயே இட நெருக்கடி இல்லாத சிறைச்சாலைகள் சிறைத்துறையாக தமிழ்நாடு சிறைத்துறை உள்ளது என்றும் அவர் பெருமிதமாக கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.