தமிழக - கேரள மாநில எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி. 15.5 டி.எம்.சி., தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும். முல்லைப் பெரியாறு அணை கேரள மாநில எல்லையில் இருந்தாலும், அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணை விவகாரத்தில், தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு பலவீனமாக உள்ளது. அதனை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரித்விராஜின் கருத்து தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
நீண்ட நாளுக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் இரு மாநில எல்லை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 137.5 அடி நீர் உள்ளது. இந்தநிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் குறையவில்லையென்றால் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்படும். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று கேரளா மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளனர்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.