தமிழ்நாடு என் குடும்பத்துடன் நீண்ட தொடர்பு கொண்டது - ராகுல் காந்தி நெகிழ்ச்சி

தமிழ்நாடு என் குடும்பத்துடன் நீண்ட தொடர்பு கொண்டது - ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ராகுல் காந்தி

தமிழ்நாடு என் குடும்பத்துடன் நீண்ட தொடர்பு கொண்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் இரண்டாம் நாளாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று ஈரோட்டிலுள்ள அரசு மருத்துவமனை சந்திப்பிலுள்ள காமராஜர், ஈவிகே.சம்பத் சிலைக்கு மாலை அணிவித்த ராகுல்காந்தி, பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

  அதன்பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர், ‘அன்புடன் தமிழ் மக்களிடம் பழகினால் அன்பை திரும்ப தருவார்கள். இதை பிரதமர் மோடி செய்யவில்லை. மோடி ஒரே மொழி, ஒரே மதம் என்ற கருத்தை புகுத்த பார்க்கிறார். தமிழ் இரண்டாம் இடத்தில் வைத்துள்ளார்கள். இதற்கு அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. பன்முகத்தன்மையே நமது பலம். ஒவ்வொரு மொழி, மத்த்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. தமிழகத்தை தலைகீழாக மாற்றி உள்ளனார். தமிழகத்தில் விவசாயிகளை ஒழித்து விட்டார்கள். முதல்முறையாக விவசாயிகள் டெல்லி செங்கோட்டையில் பேரணி நடத்த உள்ளார்கள். ஜி.எஸ்.டி 5 பணக்கார்ர்களுக்காக கொண்டு வரப்பட்டது.

  கொரோனோ காலத்தில் பணக்கார்ர்கள் சலுகைகள் பெற்று மேலும் பணக்கார்ர்கள் ஆகி விட்டனர். மோடி அரசு, விவசாயிகள் , தொழிலாளர்களுக்கான அரசு இல்லை. தமிழ்நாடு என் குடும்பத்துடன் நீண்ட தொடர்பு கொண்டது. அது அரசியல் உறவு கிடையாது. இந்த உறவு இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி என நன்றாக இருக்கிறது.

  பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையை கொடுக்க மறுக்கின்றனர். எந்த அதிகாரமும், அழுத்தமும் தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது. 1,000 ஆண்டுகளாக தமிழ் மக்கள் யாருக்கும் அடி பணியாத மக்கள். தமிழ் மக்கள் அன்புக்கு மட்டுமே அடிமை’ என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: