முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆர்.எஸ்.எஸ். பேரணியை அனுமதிக்க உத்தரவு : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

ஆர்.எஸ்.எஸ். பேரணியை அனுமதிக்க உத்தரவு : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. <Next> இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதனடிப்படையில் அனுமதி கோரி அளித்த விண்ணப்பித்தை ஏற்று, மார்ச் 5ஆம் தேதி பேரணி நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று டிஜிபி.,க்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: RSS, Supreme court, TN Govt