முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

TransGender Award: இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் திருநங்கையர்கள்  www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக  விண்ணப்பிக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருநங்கையர்களில் சிறப்பாக முன்னேறியவர்களில் ஒருவருக்கு முன் மாதிரி விருது திருங்கையர் தினமான ஏப்ரல்-15 அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்கான, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்தெடுக்கப்படும் திருநங்கைகளுக்கு  ரூ.1,00,000/- காசோலை மற்றும் சான்று வழங்கப்படும்.

திருநங்கையர் தினவிருது: விண்ணப்பதார்களுக்கான தகுதிகள்

திருநங்கையர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்

திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் திருநங்கையர்கள்  www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக  விண்ணப்பிக்க வேண்டும்.இவ்விருது, தொடர்பாக மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, அந்தந்த மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம்.

First published:

Tags: Tamil News, Transgender