ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம் - தமிழ்நாடு அரசு

புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திட ஏதுவாக ரூ.5 கோடி ரூபாய் வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்கான உருவாக்கப்பட்ட “புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த காங்கேயம் கார்த்திகேய சிவசேனாபதி  நியமிக்கப்பட்டுள்ளார்.

வாரியத்தின் அரசு சாரா உறுப்பினர்களாக  மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும்  ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல்,  ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான்; வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும்  ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ.மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாரியத்தில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.

மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திட ஏதுவாக 5 கோடி ரூபாய் வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம்.. சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இவ்வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் விவரங்களைச் சேகரிப்பது அவசியமாதலால், அவர்கள் குறித்த தரவு தளம் (database), ஒன்று ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுளளது.

இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்குடன், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, MK Stalin