Home /News /tamil-nadu /

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு

குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு

முகக்கவசம் (கோப்புப்படம்)

முகக்கவசம் (கோப்புப்படம்)

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் முகக்கவசம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    கொரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

    இதையடுத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் முகக்கவசம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், விலையில்லா முகக்கவசம் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதன்படி, குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள 6 கோடியே 74 லட்சம் பேருக்கும், மீண்டும் பயன்படுத்தும் வகையில் துணியால் தயாரிக்கப்பட்ட தலா இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது.

    ஒட்டுமொத்தமாக 13 கோடியே 48 லட்சம் முகக்கவசங்களை கொள்முதல் செய்வதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலான இந்தக் குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    முகக்கவசத்தின் தன்மை குறித்து முடிவு செய்யப்பட்டு, அதனை விநியோகிக்கும் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும் படிக்க...

    மது குடிப்பதற்காக ஆட்டுக்குட்டியைத் திருடிய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Make Your Own Mask, Ration Shop

    அடுத்த செய்தி