தமிழக அரசு சின்னமாக தேர்வான ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சிக்கு என்ன சிறப்பு?

தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு போர் வீரன் என பொருள்படும்.

Web Desk | news18
Updated: July 1, 2019, 10:44 AM IST
தமிழக அரசு சின்னமாக தேர்வான ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சிக்கு என்ன சிறப்பு?
தமிழக அரசு சின்னமாக பட்டாம்பூச்சி
Web Desk | news18
Updated: July 1, 2019, 10:44 AM IST
தமிழ் மறவன் பட்டாம்பூச்சி இனம் தமிழ் மாநில அரசு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி உள்ளிட்டவை அரசின் சின்னங்களாக உள்ளன.

இந்நிலையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக தமிழ் மறவன் பட்டாம் பூச்சியை தமிழக அரசு சின்னமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மறவன் பட்டாம் பூச்சி


தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு போர் வீரன் என பொருள்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம் உள்ளிட்ட சின்னங்களின் பட்டியலில் தற்போது பட்டாம் பூச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு என்ன சிறப்பு?

மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்களில் ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சியும் ஒன்று. இந்த பட்டாம்பூச்சிகள், கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த பட்டாம்பூச்சிகள் மஞ்சள் மற்றும் அடர்த்தியான ப்ரவுன் கலரில் இருக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... ரூ.500-க்காக குழந்தையை கடத்திச் சென்ற கட்டிட மேற்திரி சிசிடிவி-யில் சிக்கியுள்ளனர்.

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...