Home /News /tamil-nadu /

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

Tamil Nadu Governor RN Ravi visit to Delhi: ஆளுநர் ரவி டெல்லிக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi | Tamil Nadu
    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொந்த காரணங்களுக்காக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் சொந்த காரணங்களுக்காக என்று கூறப்பட்டாலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

    Also Read : உதய் உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள்.. உடற்பயிற்சிதான் காரணம் - மு.க.ஸ்டாலின்

    மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



    இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது குறித்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வார இறுதியில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Delhi, RN Ravi, Tamil Nadu Governor

    அடுத்த செய்தி