Home /News /tamil-nadu /

சமூக நீதியை முன்னெடுத்து செல்ல நீட் தேர்வு தேவை - ஆளுநர் விளக்கம்

சமூக நீதியை முன்னெடுத்து செல்ல நீட் தேர்வு தேவை - ஆளுநர் விளக்கம்

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

TN Governor Ravi : நீட் மசோதா மாணவர்களின் நலனுக்கு குறிப்பாக, ஊரகப் பகுதியைச் சேர்ந்த மற்றும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்ற கருத்திற்கு ஆளுநர் வந்துள்ளார் என விளக்கம்.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் (NEET) மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்யுமாறும் ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், தமிழகத்தில் எம்பிபிஎஸ். படிப்பில் சேர்வதற்கு நீட் (NEET) தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா; அந்த மசோதாவிற்கு அடிப்படையாக இருந்த, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கை ஆகியவற்றை ஆளுநர் விரிவாக ஆய்வு செய்தார்.

    மேலும், மருத்துவக் கல்வி சேர்க்கையில், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வதில் நீட் தேர்விற்கு முந்தைய நிலையில் இருந்த சமூகநீதி பற்றியும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த மசோதா, மாணவர்களின் நலனுக்கு குறிப்பாக, ஊரகப் பகுதியைச் சேர்ந்த மற்றும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்ற கருத்திற்கு வந்துள்ளார்.

    எனவே அந்த சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு 1ஆம் தேதியன்று திருப்பி அனுப்பிவிட்டார். அதோடு, அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான விரிவான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

    Must Read : ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கும் ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்

    வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான வழக்கில், விரிவான ஆய்வை, அதிலும் சிறப்பாக சமூகநீதி தொடர்பான கோணத்தில் உச்சநீதிமன்றம் நடத்தியது. அதன் பிறகு, ஏழை மாணவர்களின் பொருளாதார சுரண்டலை தடுக்கக் கூடியது என்றும், சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லவும் நீட் தேர்வை உறுதி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Neet Exam, RN Ravi, Tamil Nadu Governor

    அடுத்த செய்தி