'சூரப்பா அப்பழுக்கற்றவர்..' தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக தகவல்..

துணைவேந்தர் சூரப்பா.

சூரப்பா அப்பழுக்கற்றவர் தமிழக அரசுக்கு தமிழக ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 • Share this:
  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அப்பழுக்கற்றவர் என தெரிவித்து தமிழக அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்துள்ளது இதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சூரப்பா மீதான விசாரணையை நீதியரசர் கலையரசன் அண்மையில் துவக்கியுள்ளார். தற்போது விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாகவும் அதில் சூரப்பா அப்பழுக்கற்றவர் என்றும் துணைவேந்தர் பொறுப்பை அவர் நேர்மையாகவும் திறம்படவும் செயலாற்றி வருவதாகவும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  மேலும் படிக்க...Cyclone Burevi | வங்கக்கடலில் உருவானது புரேவி புயல்.. முழு விவரம்..

  மேலும் சூரப்பா மீது துவக்கப்பட்டிருக்கும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: