தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை பட்டீஸ்வரர் கோவிலில் வழிபாடு

 • Share this:
  கோவையில் நடைபெறும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் 41 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோயம்புத்தூருக்குச் சென்றுள்ளார்.

  இதனால் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் உள்ள பேரூர் பட்டீர்ஸ்வர் கோவிலுக்குச் சென்றார். அவருக்கு அங்கே கும்ப மரியாதையோடு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

  பின்னர், சிறப்பு அலங்காரத்தில் கட்சியளித்த பட்டீஸ்வரரை தரிசித்த ஆளுநர், இறுதியாக நடராஜரை வழிபாட்டார். ஆளுநர் வருகையையொட்டி பேரூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
  Published by:Suresh V
  First published: