மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி
  • Share this:
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் என்பது எட்டாத முடியாத ஒன்றாக மாறியது. அதனையடுத்து, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், ஏழை மாணவர்களான அவர்களால் தனியார் கல்லூரிகளில் கல்விகட்டணம் செலுத்த முடியாத சூழல் இருந்தது. அதனையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணத்தை அரசே அந்தந்த கல்லூரிகளுக்கு செலுத்தும்.

ஸ்காலர்ஷிப் வரும் வரை காத்திராமல் உடனடியாக செலுத்தும் வகையில் சுழல் நிதி உருவாக்கப்படும். இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கல்வி, விடுதி கட்டணத்தை ஏற்று மாணவர்களின் வாழ்வில் வசந்தத்தை அரசு ஏற்படுத்தி உள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள். அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்தே திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது நாடகம். திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading