• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சரவெடி வெடித்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

சரவெடி வெடித்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

சரவெடி வெடித்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

சரவெடி வெடித்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் சரவெடி மற்றும் பேரியம் இரசாயனம் கலந்த பட்டாசுகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    அரசின் தடை உத்தரவை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

    முன்னதாக, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், பேரியம் உப்புகளை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களை பயன்படுத்தி பசுமைப் பட்டாசுகள் என்ற பெயரில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    சரவெடி தயாரிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், பட்டாசு தொடர்பான விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநில தலைமை செயலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    இந்நிலையில், சரவெடி வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாண்பமை உச்சநீதி மன்றம் தனது 29.10.2021ஆம் தேதியிட்ட தீர்ப்பில் 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மாண்பமை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தி, எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்னபிற நிகழ்வுகளின் போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், ஆனால் பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சூற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் இரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

    மேற்படி மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள், சரவெடி மற்றும் பேரியம் இரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சரவெடி உட்பட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி மாண்பமை உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: