டெல்லியில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தின் ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியும் ஊர்திகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனால் மத்திய அரசு அனுமதிக்க மறுத்த ஊர்திகள், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுத்தன. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பார்வைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏழு கட்டமாக நடைபெற்ற ஊர்தி தேர்வுகளின் இறுதியாக 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அலங்கார ஊர்தியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல கடந்த முறை அனுமதி மறுக்கப்பட்ட கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களின் ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Republic day, Tamilnadu government