தமிழ்நாட்டில் 55,000 வேலைவாய்ப்பு: 35 தொழில் நிறுவனங்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்புந்தம்

Youtube Video

தமிழ்நாட்டில் 55 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 • Share this:
  சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் தொழில்துறை சார்பில், 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 35 தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  இதில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம், கரூர், கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐவுளி, காலணி, பேட்டரி, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

  மேலும், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், 6,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 5 திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.

  தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா காலத்திலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், தொழில் நிறுவனங்கள் அரசை எளிதில் அணுகும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர முறை '2.0' துவங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்,
  Published by:Karthick S
  First published: