தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஈ-பஸ்கள்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

news18
Updated: October 11, 2018, 7:58 PM IST
தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஈ-பஸ்கள்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
மாதிரிப் படம்.
news18
Updated: October 11, 2018, 7:58 PM IST
மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை பொது போக்குவரத்துக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு கூடிய விரைவில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை மாநில போக்குவரத்துக்காக பயன்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரிட்டனைச் சேர்ந்த சி-40 என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சி-40 நிறுவனத்தைச் சேர்ந்த குழுவை இன்று அமைச்சர் சந்தித்து பேசியதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 100 பஸ்களை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 80 பேருந்துகளை சென்னையிலும், 20 பேருந்துகள் கோயம்பத்தூரிலும் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெருகி வரும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டினைக் குறைக்க தமிழக அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்தர சிங் அம்மாநிலத்தின் முதல் மின்சக்தியில் இயங்கும் பேருந்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து டெராடூனிலிருந்து மிசெளரி வரை 30 நாட்களுக்கு இயங்கும். 30 இருக்கைகள் கொண்ட இந்தப் பேருந்தில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...