தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்களை போற்றும் வகையில், மருத்துவ கல்வி இயக்குனர்ம், ஊரக நலப்பணி இயக்குனர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், இ.எஸ்.ஐ இயக்குனர், இந்திய மருத்துவ ஆணையர், இந்திய மருத்துவ கழகத்தினர், மகப்பேறு மருத்துவர்களின் கூட்டமைப்பு, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார்.
அப்போது நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விற்கும் முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் படிக்க...
மருத்துவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்.. மருத்துவர் சைமனின் மகள் மருத்துவர்கள் தினத்தில் வேண்டுகோள்..
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மருத்துவர் நலன் அரசாக என்றும் மருத்துவர்களோடு தமிழக அரசு துணை நிற்கும் எனவும், மருத்துவர்களின் தியாகத்திற்கும் சேவைகளுக்கும் அன்பார்ந்த பாராட்டுக்கள்" என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், கொரோனா காலத்தில் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் 34 பேருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான கோப்புகள் இறுதி நிலையில் உள்ளன", என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.