மே 1 சனிக்கிழமை ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை - தமிழக அரசு

மே 1 சனிக்கிழமை ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை - தமிழக அரசு

ஊரடங்கு

மே 1 ஆம் தேதி சனிக்கிழமை ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 1 ஆம் தேதி ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

  இது குறித்த விசாரனை சென்னை உயர் நீதிமன்றல் நடைபெற்றது. அப்போது, தமிழக வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. அன்றைக்கு ஞாயிற்று கிழமை என்பதால், ஏற்கொனவே ஊரடங்கு அமலில் உள்ளது என்றும், மே 1 ஆம் தேதி சனிக்கிழமை ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

  இது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறும், வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணும் மையங்களில் செய்தியாளர்களை அனுமதிப்பது குறித்தும் முடிவெடித்து அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  Must Read : Lockdown : தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் மாற்றமா? புதிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

   

  அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: