கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

கொரோனா

கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், இரண்டவது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அரிதியிட்டு கணிக்க முடியவில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  இந்திய அளவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துவருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் இருந்துவருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அரசு தலைமை வழக்கறிஞரிடம், இரண்டாவது அலை தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதாரத் துறையின் அறிவுரை ஏதும் உள்ளதா என்று கேட்டார்.

  அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், கொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், இரண்டவது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அரிதியிட்டு கணிக்க முடியவில்லை என்றும் தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணனை இன்று பிற்பகலில் சந்திக்குமாறு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: