• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆக்ஸிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் தொடரவேண்டிய அவசியம் இல்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

ஆக்ஸிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் தொடரவேண்டிய அவசியம் இல்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்திம் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவியது. தினந்தோறும் கணக்கிலடங்கா மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக மருத்துவத்துக்கு தேவையான திரவ நிலையிலான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக செய்திகள் வெளியாகின.

    அதேபோல, தமிழ்நாட்டிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்தநேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துதருவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அதற்கு தூத்துக்குடி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், தமிழ்நாடு அரசு அனைத்துகட்சி கூட்டம் கூட்டி ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது.

    அதன்படி, ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு தற்கால அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மே மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் அளித்த மூன்று மாத கால அனுமதி நாளையுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், ‘கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கவேண்டும்’ என்று கோரி ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

    Thoothukudi Sterlite : ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 2 வாரத்தில் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டம்?



     Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


    அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ‘தமிழ்நாட்டில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்கத் தேவையில்லை. எனவே, ஸ்டெர்லைட்டின் இடைக்கால மனுவை எதிர்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ‘அதுவரையில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடரலாம்’ என்று உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: