• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 12-ம் வகுப்பு அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை- ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

12-ம் வகுப்பு அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை- ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

மு.க.ஸ்டாலினடம் அறிக்கை வழங்கும் ஏ.கே.ராஜன்

மு.க.ஸ்டாலினடம் அறிக்கை வழங்கும் ஏ.கே.ராஜன்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

  • Share this:
    இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் கிராமப் புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தி.மு.க குற்றம்சாட்டிவந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து தி.மு.க தேர்தலைச் சந்தித்தது. அதனையடுத்து, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்த நிலையில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழு மாநிலம் ஆய்வு நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்தநிலையில், நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த அறிக்கையில், ‘நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: