• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் 70 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நிறுவப்படும்- 3-வது அலைக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 70 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நிறுவப்படும்- 3-வது அலைக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் வரும் 15 ஆம் தேதிக்குள் PM Cares நிதியின் கீழ் 70 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் நிறுவப்பட உள்ளன.

  • Share this:
தமிழ்நாட்டில் சிஎஸ்ஆர் நிதி மூலமாக ஏற்கனவே 26 ஆக்ஸிஜன் அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 59 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் விரைவில் நிறுவப்பட உள்ளன. எனவே மொத்தமாக தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலைக்கான தயாரிப்பு நடவடிக்கையாக 155 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயங்கும்.

இந்த அலகுகளிலிருந்து 180 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். இவை தவிர  பெரிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் மூலம் மாநிலத்துக்கு 444 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும்.
மொத்தமாக மாநிலத்தில் மட்டும் சுமார் 600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்துக் கொள்ள முடியும். இரண்டாவது அலையில் மாநிலத்தின் அதிகபட்ச ஆக்சிஜன் தேவை 560 மெட்ரிக் டன் ஆகும். மூன்றாவது அலை மிக தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தினால் மாநிலத்தில் அதிகபட்சமாக 42 ஆயிரம் நோயாளிகளுக்கு 800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படலாம் என சுகாதாரத்துறை கணக்கிட்டுள்ளது.

எனவே மாநிலத்தில் உள்ள 600 மெட்ரிக் டன் போக மீதமுள்ள 200 மெட்ரிக் டன் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஆக்சிஜன் தயாரிப்புக்கான தேசிய அளவிலான கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டாவது அலையின் போது மத்திய தொகுப்பிலிருந்து 200 மெட்ரிக் டன் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்ததால் இந்த முறையும் அதே அளவு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களுக்கு முன் 90 மெட்ரிக் டன் ஆக இருந்த ஆக்சிஜன் தேவை தற்போது 70 மெட்ரிக் டன் ஆக குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க ஆக்சிஜன் தேவை ஒரு முக்கிய அளவுகோலாகும். ஆக்சிஜன் தேவை அதிகரித்தால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் மூன்றாவது அலையின் பாதிப்பு தீவிரமாக இருந்தால் அதிகபட்சமாக 2,09,000 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம் என்றும் இதில் 1,25,000 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் இருப்பார்கள் என்றும் 42 ஆயிரம் பேர் ஆக்சிஜன் தேவைப்படும் என்றும் சுகாதாரத்துறையால் கணிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: