சென்னைக்கு அருகில் உலகத் தரத்தில் விளையாட்டு நகரம் - விளையாட்டு துறை கொள்கை குறிப்பில் தகவல்

தமிழக அரசு

சென்னை அருகில் உலகத் தரத்தில் விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் என்று விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சகம் கொள்கைகுறிப்பில் தெரிவித்துள்ளது.

 • Share this:
  விளையாட்டுகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட விளையாட்டு நகரம் சென்னைக்கு அருகில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஒலிம்பிக், பாராலிம்பிக் உள்ளிட்ட உலகளவாகிய தொடர்களில் தமிழக வீரர்கள் தங்களுடைய திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திவருகின்றனர். இன்னும், மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் மிகச் சிறப்பான வீரர்கள் அடையாளம் கிடைக்காமல், தங்கள் திறமைமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் இன்றி தவித்துவருகின்றனர். தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று பல சமயங்களில் விளையாட்டு வீரர்கள் கோரிக்கைவைத்துவருகின்றனர்.

  இந்தநிலையில், உலகதரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஒலிம்பிக் அகாடமிகள் மாநிலத்தின் நான்கு மண்டலங்களில் அமைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு உயர் திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதே போல பல்வேறு விளையாட்டுகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட விளையாட்டு நகரம் சென்னைக்கு அருகில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஆலோசகர்களை தேர்வு செய்யுமாறும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கோரப்பட்டுள்ளதாகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: