ஜனவரி மூன்றாம் தேதியிலிருந்து 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தினை சென்னை அடுத்த போரூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதேபோன்று மற்ற மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளை வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க துணை சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில், 2007 மற்றும் அதற்கு முன் பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் பட்டியலை அரசு, தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி, சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகங்கள் தயார் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியுடைய சிறார்கள் கோவின் செயலியில், ஆதார் கார்டு அல்லது பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி சனிக்கிழமை தொடங்கியது.
சென்னையை 10 ஆண்டுகளாக அ.தி.மு.க குட்டிச் சுவராக்கியுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஆசிரியர் ஒருவரை, சிறப்பு அதிகாரியாக, தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்த, பள்ளிகளில் போதிய இடவசதியை ஏற்படுத்தி தருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பொது சுகாதார இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.